About Us
திருக்கோவில் அறிமுகம்
எங்கள் திருக்கோயில் பற்றி
அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயில், பக்தர்களின் நம்பிக்கை மற்றும் இறை அருளால் உருவான புனித ஆலயமாகும்.
29 வயதுடைய திரு. வினோத் அவர்களின் மூலம், அம்மன்களின் அருளால் இத்திருக்கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை 27.07.2023, ஆடி மாதம் 11ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணிகளுக்குப் பிறகு, 01.02.2026, தை மாதம் 18ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அருள்பாலிக்கும் தெய்வங்கள்
எங்கள் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் தெய்வங்கள் பக்தர்களின் நம்பிக்கைக்கும் ஆன்மீக வாழ்விற்கும் வழிகாட்டியாக திகழ்கின்றனர். ஒவ்வொரு தெய்வமும் தனித்துவமான அருளும் மகிமையும் கொண்டவை. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை சமர்ப்பித்து இறையருளைப் பெற்று மன அமைதியும் நல்வாழ்வும் அடைந்து வருகின்றனர். இத்தெய்வங்களின் அருளால் செல்வம், ஆரோக்கியம், கல்வி, தொழில் மற்றும் குடும்ப நலன் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ விநாயகர் எந்த நல்ல காரியமும் தடையின்றி நடைபெற அருள் புரியும் முதற்கடவுளாக வணங்கப்படுகிறார்
ஸ்ரீ மகா காளியம்மன்
ஸ்ரீ மகா காளியம்மன் 21 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மகா காளியம்மன், பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக வணங்கப்படுகிறார்.
ஸ்ரீ வாராகி அம்மன்
ஸ்ரீ வாராகி அம்மன் பக்தர்களுக்கு துணை நின்று, துன்பங்களை நீக்கி அருள் புரியும் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
ஸ்ரீ மாரியம்மன்
ஸ்ரீ மாரியம்மன் பக்தர்களின் நோய், துன்பம், கவலைகளை நீக்கி அருள் புரியும் அம்மனாக வழிபடப்படுகிறார்
திருக்கோவிலின் நிர்வாகிகள்
எங்கள் திருக்கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் கோவிலின் வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் ஆன்மீக நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி வருகின்றனர். பக்தர்களின் நலனையும், கோவிலின் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அனைத்து திருவிழாக்கள் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்து வருகின்றனர்
அறங்காவலர்
வினோத் 8220821196
பூசாரி
நாரயணன் 7338756461